தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இரட்டை ரயில் பாதை நிலப்பிரச்னை முடிந்ததும் பணிகள் முடியும்: ஜான் தாமஸ் - இரட்டை ரயில் பாதை நிலப்பிரச்னை முடிந்ததும் பணிகள் முடியும்

கன்னியாகுமரி: இரட்டை ரயில் பாதை நிலம் கையகப்படுத்தும் பிரச்னை தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதைத் தொடர்ந்து, இப்பிரச்னைகள் முடிந்ததும் 2022ஆம் ஆண்டு மார்ச் மாதம் பணிகள் முடிவடையும் என்று தென்னக ரயில்வே பொது மேலாளர் ஜான் தாமஸ் கூறியுள்ளார்.

john thomas

By

Published : Nov 22, 2019, 5:31 PM IST

கன்னியாகுமரி மாவட்டத்தில் ரயில்வே திட்டங்கள் குறித்தும், அங்கு நடந்து வரும் பணிகள் குறித்தும் தென்னக ரயில்வே பொது மேலாளர் ஜான் தாமஸ் ஆய்வு செய்தார். அவரிடம் கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் வசந்தகுமார், கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் ஆஸ்டின் ஆகியோர் கோரிக்கைகள் வைத்தனர்.

அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய ஜான் தாமஸ், "மதுரை – மணியாச்சி - கன்னியாகுமரி மற்றும் கன்னியாகுமரி - திருவனந்தபுரம் வரை உள்ள இரட்டை ரயில் பாதை பணிகள் வரும் 2022ஆம் ஆண்டு மார்ச் மாதம் முடிவடையும். நிலங்களை கையகப்படுத்துவதில் வழக்குகள் உள்ளதால் அந்த வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன.

தென்னக ரயில்வே பொது மேலாளர் ஜான் தாமஸ் ஆய்வு

இதுதொடர்பாக தமிழ்நாடு அரசும் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது. பிரச்னைகள் முடிந்ததும் இரட்டை ரயில் பாதை பணிகள் முடிவடையும். கிழக்குக் கடற்கரைச் சாலை ரயில் பாதைக்கான ஆய்வுப்பணிகள் நடந்து கொண்டிருக்கிறது. ரயில்களில் திருட்டு மற்றும் சுகாதார வசதிகள் குறித்து புகார் எதுவும் இல்லை. அதேநேரம் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கூடுதல் பாதுகாப்பு வழங்க பாதுகாப்பு அலுவலர்களிடம் கோரப்பட்டுள்ளது" என்று கூறினார்.

இதையும் படிங்க: குடிமகன்களின் கூடாரமாக மாறிவரும் திறக்கப்படாத ரயில்வே மேம்பாலம்!

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details