தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சுடுகாட்டில் கொலை செய்யப்பட்ட நிலையில் கிடந்த சடலம்! - dead body

கன்னியாகுமரி: சுடுகாட்டில் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுக் கிடந்த சடலத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

கொலை

By

Published : Jun 6, 2019, 2:54 PM IST

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் - கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது கரியமாணிக்கபுரம் கிராமம். இங்கு சுமார் 5,000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்துவருகின்றன. இக்கிராமத்தின் எல்லையில் நாகர்கோவில், அதன் சுற்று வட்டாரப் பகுதியை மக்கள் இறந்தால் எரியூட்டுவதற்காக பத்துக்கும் அதிமான சுடுகாடுகள் பல்வேறு சமுதாய மக்களால் அமைக்கப்பட்டுள்ளன.

சுடுகாட்டில் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுக் கிடந்த சடலத்தால் பரபரப்பு

இந்நிலையில், இப்பகுதியில் உள்ள சுடுகாடு மையத்தில் கழுத்தில் கத்திக் குத்து காயங்களுடன், தலை, கை, கால்கள், உடல் பகுதிகள் அனைத்தும் எரிக்கப்பட்டு, அடையாளம் தெரியாத நபர்களால் கொடூரமாக கொலை செய்யப்பட்டு நிலையில் 40 வயது மதிக்கதக்க ஆண் சடலம் ஒன்று கிடந்தது.

இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் கோட்டார் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சடலத்தைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.

ABOUT THE AUTHOR

...view details