தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குமரியில் கோயில் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை - Kannyakumari Crime News

கன்னியாகுமரி: முருகன் குன்றம் அருள்மிகு வேல் முருகன் கோயிலில் பூட்டை உடைத்து தங்க நகைகள், உண்டியல் பணம் கொள்ளையடிக்கப்பட்டது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

குமரியில் கோயில் பூட்டை உடைத்து நகைகள், பணம் கொள்ளை
குமரியில் கோயில் பூட்டை உடைத்து நகைகள், பணம் கொள்ளை

By

Published : Oct 24, 2020, 4:38 PM IST

கன்னியாகுமரி அருகே முருகன் குன்றத்தின் மலையின் உச்சியில் அருள்மிகு வேல் முருகன் திருக்கோயில் உள்ளது. கோயிலில் தினம்தோறும் ஐந்து முறை பூஜை நடைபெறுவது வழக்கம். தற்போது கரோனா காலம் என்பதால் நாள்தோறும் இரண்டு வேளை பூஜை நடைபெறுகிறது. இந்தக் கோயிலின் பூசாரி ராஜரத்தினம் நேற்றிரவு (அக்டோபர் 23) பூஜைகளை முடித்த பின், கோயிலை பூட்டிவிட்டு வீட்டிற்குச் சென்றுவிட்டார்.

பின்னர், இன்று (அக்டோபர் 24) காலையில் பூஜை செய்வதற்காக வந்தபோது கோயிலின் கதவுகள் உடைக்கப்பட்டு இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
உடனடியாக, இது குறித்து கன்னியாகுமரி காவல் துறையினருக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரித்தனர்.

அதில், கொள்ளையர்கள் நள்ளிரவில் கோயிலின் பூட்டை உடைத்து சுவாமி சிலைகளில் அணிவிக்கப்பட்டிருந்த தங்க நகைகளையும், உண்டியல்களை உடைத்து அதில் இருந்த பணத்தையும் கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது. மேலும் வெள்ளிச்சிலை, வெள்ளிப் பொருள்கள், அரிவாள், பழக்குலை ஆகியவற்றை ஆங்காங்கே போட்டுவிட்டுச் சென்றதும், கொள்ளையர்கள் கோயிலில் அமர்ந்து மது அருந்திவிட்டு மது பாட்டில்களை அங்கேயே விட்டுச் சென்றதும் தெரியவந்தது.

கொள்ளையர்கள் தங்களது நடமாட்டம் குறித்த தடயங்களை அழிப்பதற்காக அருகில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமரா, ஹார்ட் டிஸ்க் ஆகியவற்றையும் எடுத்துச் சென்றனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details