தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கழண்டு விழுந்த கவர்மெண்ட் பஸ் சீட்... ரோட்டில் விழுந்து பயணி காயம்... - பளுகல் பகுதிக்கு செல்லும் அரசு பேருந்து

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓடிக்கொண்டிருந்த அரசுப் பேருந்தில் சீட் கழண்டதில் அமர்ந்திருந்த பயணி சாலையில் விழுந்து காயமடைந்தார்.

கழண்டு விழுந்த கவர்மெண்ட் பஸ் சீட்
கழண்டு விழுந்த கவர்மெண்ட் பஸ் சீட்

By

Published : Oct 10, 2022, 8:25 PM IST

கன்னியாகுமரி: மார்த்தாண்டத்தில் இருந்து தமிழ்நாடு - கேரள எல்லை பகுதியான பளுகல் பகுதிக்கு செல்லும் அரசுப் பேருந்து இன்று காலை இடைக்கோடு பகுதி சென்றது. அப்போது பேருந்தின் பின்புற வாசல் அருகில் உள்ள வலதுபக்க சீட் கழண்டு விழுந்தது.

அந்த சீட்டில் அமர்ந்திருந்த தஞ்சாவூர் பகுதியைச் சேர்ந்த செல்வராஜ் பேருந்தில் இருந்து கீழே விழுந்தார். இதை பார்த்து சக பயணிகள் கூச்சல் போட்டதால் பேருந்து ஓட்டுநர் பேருந்தை நிறுத்தினார் . கீழே விழுந்த செல்வராஜ் படு காயங்களுடன் கிடந்ததை பார்த்த சக பயணிகள் மீட்டு அதே பேருந்தில் ஏற்றி கன்னுமாமூடு அரசு ஆரம்ப சுகாதார நிலையம் கொண்டு சேர்த்தனர்.

அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பேருந்தின் பின்னால் எந்த வாகனமும் வராததால் நல்வாய்ப்பாக செல்வராஜ் உயிர்தப்பினர். மாவட்டத்தில் இயங்கும் அரசுப் பேருந்துகளில் நிறைய உள்ளூர் பேருந்துகள் பழுதடைந்து, ஆபத்தான நிலையில் இயக்கப்படுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.

இதையும் படிங்க:வாடகை வீட்டில் தங்கி துப்பாக்கி தயாரிப்பு - தேசிய புலனாய்வு முகமை பிரிவு அதிகாரிகள் விசாரணை

ABOUT THE AUTHOR

...view details