தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

உணவகத்தில் அழுகிய நிலையில் மீன்கள்...வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி - Nagercoil Corporation Commissioner

கன்னியாகுமரி அருகே தனியார் உணவகத்தில் இருந்து அழுகிய நிலையில் மீன்கள் எடுக்கப்பட்டதால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

Etv Bharat
Etv Bharat

By

Published : Sep 12, 2022, 11:57 AM IST

கன்னியாகுமரி: நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே இயங்கி வரும் தனியார் உணவகத்தில் மீன்களை பதப்படுத்தி வைக்க எந்த வித வசதிகள் இன்றி, தரமற்ற மீன்கள் இருப்பதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஆனந்த மோகன் மற்றும் அதிகாரிகள் அந்த உணவகத்தில் சோதனை செய்தனர்.

அப்போது அழுகிய நிலையில் மீன்கள் இருப்பது தெரிய வந்தது. அந்த மீன்களை பதப்படுத்த எந்தவித வசதியும் அந்த உணவகத்தில் இல்லாததும் கண்டறியப்பட்டதை கண்டுஅதிகாரிகள், அதிர்ச்சி அடைந்தனர்.

இதனையடுத்து உணவக இருப்பில் இருந்த 500 கிலோ மீன்களை பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து சுகாதாரமற்ற முறையில் செயல்பட்ட உணவகத்திற்கு ஐம்பது ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

இதையும் படிங்க:இன்ஸ்டாகிராம் காதல்...11ஆம் வகுப்பு மாணவியை திருமணம் செய்த இளைஞர் கைது

ABOUT THE AUTHOR

...view details