கன்னியாகுமரிஅரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு தினசரி 1000க்கும் மேற்பட்ட வெளிநோயாளிகள் சிகிச்சைப்பெறுவதற்காக வருகின்றனர். குமரி மாவட்டம் மட்டுமல்ல நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட அண்டை மாவட்டங்களில் இருந்தும் விபத்துகளில் சிக்கி உயிருக்கு போராடுபவர்கள் உடனடியாக அவசர சிகிச்சைக்கு கன்னியாகுமரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு வந்து சிகிச்சைப்பெற்று செல்கின்றனர்.
அந்த வகையில் நோயாளிகள் தங்கி சிகிச்சைப்பெறுவதற்கான கூடுதல் மருத்துவமனை கட்டடம் உள்ளது. இதில் மூன்றாவது தளத்திற்கு நோயாளிகள் செல்வதற்கு இரண்டு லிஃப்ட் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இரண்டு தினங்களுக்கு முன்பு ஒரு லிஃப்ட் பழுதாகி, ஒரு மணி நேரத்துக்கு மேல் ஆறு பேர் அதில் சிக்கித்தவித்தனர்.
பின்னர் லிஃப்டின் கதவுகள் உடைக்கப்பட்டு அவர்கள் மீட்கப்பட்டனர். இந்தச்சம்பவம் நடந்து இரண்டு நாட்களுக்குள் மீண்டும் இன்று மற்றொரு லிஃப்ட் பழுதாகி உள்ளது. இரண்டு குழந்தைகள் உட்பட நோயாளிகள், பார்வையாளர்கள் என 8 பேர் சென்று கொண்டிருந்தபோது பழுதாகியது.