கன்னியாகுமரி:இந்திய ஒற்றுமை பயணத்தின் 2ஆவது நாளான இன்று (செப் 8) காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி அகஸ்தீஸ்வரத்தில் இருந்து நடை பயணத்தை தொடங்கினார். தொடங்கும் முன் ராகுல்காந்தி தேசியக் கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். காங்கிரஸ் கட்சி சார்பில் இந்திய ஒற்றுமைநடைப்பயணம் கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை 150 நாட்கள் 3,500 கிலோமீட்டர் தூரம் நடக்கிறது. நேற்று கன்னியாகுமரியில் தொடங்கியது. தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கேலட் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு தொடங்கி வைத்தனர்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கதரால் ஆன தேசிய கொடியை காந்தி மண்டபம் முன்பு ராகுல்காந்தியிடம் வழங்கி நடைப்பயணத்தை தொடங்கிவைத்தார். அதைப் பெற்றுக்கொண்ட அவர் அங்கிருந்து நடைப்பயணமாக புறப்பட்டு கடற்கரை சாலையில் நடைபெற்ற பொதுக்குழுவில் பேசினார். பொதுக்கூட்டம் முடிந்ததும் கார் மூலமாக அகஸ்தீஸ்வரத்தில் உள்ள விவேகானந்தா கல்லூரி மைதானத்தில் கேரவனில் ஓய்வெடுத்தார்.