மத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டம் 2019-ஐ திரும்பப் பெறக்கோரி கன்னியாகுமரி முதல் களியக்காவிளை வரை 58 கிலோ மீட்டர் தூரத்துக்கு மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.
இதில் பல்வேறு அரசியல் கட்சியினர் பொதுமக்கள் கலந்துகொண்டனர். இந்திய குடியுரிமை திருத்தச் சட்டத்தைக் கொண்டுவந்த மத்திய அரசைக் கண்டித்தும் அதனை ரத்து செய்ய வலியுறுத்தியும் நாடு முழுவதும் போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
அந்தவகையில் மத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெறக்கோரி கன்னியாகுமரி மக்கள் ஒற்றுமை இயக்கம் சார்பில் கன்னியாகுமரி முதல் களியக்காவிளை வரை 58 கிலோ மீட்டர் தூரத்துக்கு மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.
கன்னியாகுமரியில் மனிதசங்கிலி போராட்டம் இதில் திமுக மாவட்டச் செயலாளர் சுரேஷ்ராஜன் எம்எல்ஏ உள்பட பல்வேறு அரசியல் கட்சியினர் பொது மக்கள் கலந்து கொண்டனர். மத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டம் 2019ஐ திரும்பப் பெறக்கோரியும், தேசிய மக்கள் தொகை பதிவேடு, தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றை நடைமுறைப்படுத்துவதை நிறுத்தி வைக்கக் கோரியும் மத்திய அரசை வலியுறுத்தி குமரி மக்கள் ஒற்றுமை இயக்கத்தின் சார்பில் இந்த மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.
இதையும் படிங்க:டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளைப் பார்த்தாவது பாஜக திருந்தவேண்டும்: திருமாவளவன்