தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மழை காரணமாக இடிந்து விழுந்த வீடு - நல்வாய்ப்பாக உயிரிழப்பு இல்லை - வீடு இடிந்து விழுந்து இருசக்கர வாகனம் சேதம்

கன்னியாகுமரி: கிருஷ்ணன்கோவில் பகுதியில் பெய்த மழை காரணமாக வீடு இடிந்து விழுந்து இருசக்கர வாகனம் சேதமடைந்தது. வீட்டில் யாரும் இல்லாததால் உயிர் சேதம் ஏதும் இல்லை.

வீடு இடிந்து விழுந்து இருசக்கர வாகனம் சேதம்
வீடு இடிந்து விழுந்து இருசக்கர வாகனம் சேதம்

By

Published : May 16, 2021, 12:49 PM IST

கன்னியாகுமரி மாவட்டம் கிருஷ்ணன்கோவில் அடுத்த பாரதர் தெருவை சேர்ந்தவர் இன்னாசி, இவர் கணவர் வர்கீஸ் இறந்துவிட்டதால் தனது இரண்டு மகன்களுடன் தனக்கு சொந்தமான பழைய வீட்டில் வசித்து வந்தார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வந்தது. இதன் காரணமாக இவர்களது வீடு மழையில் சேதமாகி இடிந்து விழும் நிலையில் காணப்பட்டது. இதனை தொடர்ந்து நேற்றிரவு இன்னாசி மற்றும் அவரது மகன்கள் பக்கத்து தெருவில் இருக்கும் இன்னாசியின் சகோதரி வீட்டில் தங்கியுள்ளனர்.

இந்நிலையில், அதிகாலை 4 மணியளவில் இவர்களுக்கு சொந்தமான பழமையான வீடு இடிந்து விழுந்ததில் வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனம் சேதம் அடைந்தது. வீட்டில் யாரும் இல்லாததால் உயிரிழப்பு இல்லை.

இதையும் படிங்க:குமரியில் அபார வெற்றி: தந்தை கனவை நனவாக்கத் தயாராகும் விஜய் வசந்த்!

ABOUT THE AUTHOR

...view details