கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி மிஷன் காம்பவுண்டைச் சேர்ந்தவர் சங்கர பாண்டியன். இவர் பச்சைத் தமிழன் கட்சியின் முக்கிய நிர்வாகியாக இருந்துவருகிறார்.
பிரதமர் மோடியை விமர்சித்த பச்சைத் தமிழகம் கட்சியின் நிர்வாகி - பாஜகவினர் புகார் - மோடியை சாடிய பச்சை தமிழ் கட்சி
கன்னியாகுமரி: பிரதமர் மோடி குறித்து தவறான கருத்துக்களை வெளியிட்டதாக பச்சைத் தமிழகம் கட்சியின் நிர்வாகி மீது பாஜகவினர் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளனர்.
![பிரதமர் மோடியை விமர்சித்த பச்சைத் தமிழகம் கட்சியின் நிர்வாகி - பாஜகவினர் புகார் social media](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-7604984-thumbnail-3x2-yu.jpg)
social media
சங்கர பாண்டியனின் சமூகவலைதள பதிவு
இந்நிலையில், இவர் பிரதமர் மோடி குறித்து சமூக வலைதளங்களில் தரமற்ற முறையில் விமர்சித்து, கொச்சைப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, தோவாளை பாஜக ஒன்றிய நிர்வாகி கிருஷ்ணன், சங்கர பாண்டியன் மீது தேசத்துரோக வழக்கின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஆரல்வாய்மொழி காவல் நிலையத்தில் புகாரளித்தார். இந்தப் புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.
இதையும் படிங்க:'கரோனா தடுப்புப் பணிகளில் கோட்டைவிட மாட்டோம்'- அமைச்சர் செல்லூர் ராஜூ