கன்னியாகுமரி: புனித சவேரியார் ஆசி பெற்ற கடற்கரை கிராமங்களில் ஒன்றான பள்ளம்துறை கடற்கரை கிராமத்தில் நூற்றாண்டுகளைக் கடந்த தூய மத்தேயூ தேவாலாயம் உள்ளது. இந்த தேவாலயத்தில் ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் 10 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம்.
அந்த வகையில் இந்த ஆண்டு திருவிழா நேற்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதைத்தொடர்ந்து சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றன.
கோட்டார் மறைமாவட்ட பேராயர் நஸ்ரேன் சூசை தலைமையில் திருப்பலி நடைபெற்றது. தேவாலயத்தின் திருக்கொடியேற்ற நிகழ்ச்சியில் குமரி மாவட்டத்தின் கடற்கரை கிராம மக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
நூற்றாண்டு பழமை வாய்ந்த தூய மத்தேயூ தேவாலாய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது கடந்த ஆண்டு நூற்றாண்டு விழா கொண்டாட இருந்த நிலையில், கரோனா காலகட்டம் என்பதால் விழாக்கள் நடத்த முடியவில்லை. எனவே இந்த திருவிழாவோடு நூற்றாண்டு விழா கொண்டாட்டமும் இணைத்து கொண்டாடப்படுவதாக, தேவாலயத்தின் அருள்பணியாளர் சூசை ஆற்றனி தெரிவித்தார்.
இதையும் படிங்க:சென்னை விமான நிலையத்தில் இந்தியில் மட்டும் அறிவிப்பு ? அதிகாரிகள் விளக்கம்