தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

Karthigai Deepam: கார்த்திகை தீபத் திருநாள்; பிரமாண்ட சூரனை உருவாக்கிய சிறுவர்கள் - சிறுவர்களின் கார்த்திகை திருவிழா கொண்டாட்டம்

திருக்கார்த்திகைத் திருநாளை (Karthigai Deepam) முன்னிட்டு குமரியில் சிறுவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து பிரமாண்ட சூரனை உருவாக்கி ஊர்வலமாக எடுத்துச் சென்று எரித்தனர்.

சிறுவர்கள் தூக்கிச் செல்லும் பிரம்மாண்ட சூரன் தொடர்பான காணொலி
சிறுவர்கள் தூக்கிச் செல்லும் பிரம்மாண்ட சூரன் தொடர்பான காணொலி

By

Published : Nov 20, 2021, 8:11 AM IST

Updated : Nov 20, 2021, 10:07 AM IST

கன்னியாகுமரி: தமிழ்நாடு முழுவதும் திருக்கார்த்திகைப் பண்டிகையானது (Karthigai Deepam) நேற்று முந்தினம் (நவம்பர்18) பொதுமக்களால் வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. பெண்கள் அனைவரும் தங்கள் வீடுகளில் வண்ண கோலமிட்டு தீபம் ஏற்றி இறை வழிபாடு நடத்தினர்.

இதேபோன்று இளைஞர்கள், சிறுவர்கள் உள்ளிட்டோர் தங்கள் பகுதிகளில் சிறிய அளவிலான சொக்கப்பனை கொளுத்திவருகின்றனர்.

சிறுவர்கள் தூக்கிச் செல்லும் பிரமாண்ட சூரன் தொடர்பான காணொலி

இந்நிலையில் கன்னியாகுமரியின் குமாரபுரம் தோப்பூரில் சிறுவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து சுமார் 20 அடி உயர பிரமாண்ட சூரன் ஒன்றை உருவாக்கினர். பின்னர் அதை ஊர்வலமாகத் தோளில் சுமந்துசென்று தீயில் எரித்தனர். தற்போது இது தொடர்பான காணொலி சமூக வலைதளங்களில் வைரலாகிறது.

இதையும் படிங்க:கார்த்திகை தீப ஒளியில் ஜொலிக்கும் மீனாட்சியம்மன் கோயில்

Last Updated : Nov 20, 2021, 10:07 AM IST

ABOUT THE AUTHOR

...view details