தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காவலர்களால் மீட்கப்பட்ட பிச்சைக்காரரிடம் கத்தி: குமரியில் பரபரப்பு - கன்னியாகுமரி மாவட்டச் செய்திகள்

கன்னியாகுமரி: நாகர்கோவிலில் காவலர்களால் மீட்கப்பட்ட பிச்சைக்காரரிடம் கத்தி இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

காவலர்களால் மீட்கப்பட்ட பிச்சைக்காரரிடம் கத்தி
காவலர்களால் மீட்கப்பட்ட பிச்சைக்காரரிடம் கத்தி

By

Published : Jun 9, 2021, 2:09 AM IST

கரோனா ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் நாகர்கோவில் பகுதியில் சுற்றித் திரியும் ஆதரவற்றோர், பிச்சைக்காரர்களுக்குத் தொற்றுப் பரவாமல் தடுக்கவும், உணவு சரியாகக் கிடைக்கவும் மாநகராட்சி அலுவலர்களும், காவலர்களும் இணைந்து அவர்களை மீட்டு காப்பகங்களில் சேர்த்துவருகிறார்கள்.

அதன்படி நாகர்கோவில் அண்ணா பேருந்து நிலையம் பகுதியில் தங்கியிருந்த பிச்சைக்காரர்களை நாகர்கோவில் கட்டுப்பாட்டு அறை காவல் ஆய்வாளர் சாம்சன் உள்ளிட்ட காவலர்கள் மீட்டனர்.

அவர்களைப் பரிசோதனை செய்தபோது மூன்று பேரில் ஒருவர் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த குமார் (50) என்பது தெரியவந்தது.

அவரிடம் பிச்சையெடுத்து சேமித்த ரூ.3,500 பணமும், சுமார் ஒரு அடி நீளமுள்ள கத்தி ஒன்றும் இருந்தன. பிச்சைக்காரரிடம் கத்தி இருந்ததைப் பார்த்த காவலர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

அவரிடம், 'கத்தி எதற்காக வைத்திருக்கிறீர்கள்' என்று கேட்டதற்கு, பிச்சை எடுத்த பணத்தை கஞ்சா போதை ஆசாமிகள் பறித்துச் செல்வதாகவும், அவர்களை எச்சரிக்கை செய்ய கத்தி வைத்திருப்பதாகவும் தெரிவித்தார்.

இதையடுத்து, காவலர்கள் அவர் வைத்திருந்த கத்தியைப் பறிமுதல்செய்தனர். மேலும் அவர் மீது குற்ற வழக்குகள் எதாவது உள்ளனவா என்பது குறித்தும் விசாரணை நடத்தினர்.

காவலர்களால் மீட்கப்பட்ட பிச்சைக்காரரிடம் கத்தி

இதில் அவர் மீது வழக்கு எதுவும் இல்லை என்பது தெரியவந்தது. இவருடன் இருந்த மற்றொருவர் கருங்கலிலிருந்து தினமும் ஆட்டோவில் நாகர்கோவிலுக்கு வந்து பிச்சை எடுத்துச்செல்வதாகவும், கருங்கலில் அவர் வீடு கட்டி வாடகைக்கு விட்டிருப்பதும் விசாரணையில் தெரியவந்தது.

ABOUT THE AUTHOR

...view details