கன்னியாகுமரி: தூய அலங்கார உபகார மாதா திருத்தளத்தின் ஆண்டு பெருவிழா ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 10 நாட்கள் கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டிற்கான ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
முன்னதாக தேவாலயத்தில் சிறப்பு திருப்பலி, நேர்ச்சை கொடிகள் பவனி, திருக்கொடி பவனியும் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து திருக்கொடியேற்றம் நடைபெற்றது. தொடர்ந்து பத்து நாள் நிகழ்ச்சிகளிலும் பழைய ஆலயம் திருப்பலி, திருஇருதய ஆண்டவர் பீடத்தில் நற்கருணை ஆராதனை, புனித சூசையப்பர் பீடத்தில் திருப்பலி, தினசரி செபமாலை உள்ளிட்டப் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன