உலகம் முழுவதுமுள்ள தமிழர்களால் பொங்கல்விழா விமர்சையாகக் கொண்டாடப்பட்டுவருகிறது. இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டம் பூவியூரில் நடைபெற்ற விழாவிற்கு தமிழ்நாட்டிற்கான டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு 69ஆவது ஆண்டு பொங்கல் விழாவை தொடங்கி வைத்தார்.
பொங்கல் விழாவின் முதல் நாள் நிகழ்ச்சியான இன்று அரசுப் பள்ளியில் படித்து 10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார். பின்னர் பேசிய அவர், "தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தமிழர்களுக்கான திட்டங்களைத் தீட்டி செயல்படுத்துவதில் சிறப்பாகச் செயல்பட்டுவருகிறார்.
தற்போது, முதற்கட்டமாக ஊரகப் பகுதிகளில் உள்ளாட்சித் தேர்தல் சிறப்பாக நடைபெற்று, அதிமுக அதிக இடங்களைப் பெற்றுள்ளது. வெற்றி பெற்றுள்ள உள்ளாட்சிப் பிரதிநிதிகள் அவர்களின் பகுதிகளிலுள்ள சாக்கடை, தெருவிளக்கு போன்ற பொதுமக்களின் அடிப்படை பிரச்னைகளைத் தீர்க்க முனைப்புக் காட்டிவருகின்றனர்.
விழாவில் பேசிய தளவாய் சுந்தரம்
அதுபோல மீதமுள்ள பகுதிகளுக்கான குறிப்பாக பேரூராட்சிக்கான தேர்தல் அறிவிப்பு அடுத்த மாதம் 25ஆம் தேதிக்குள் வெளியாகும்" என்றார். தொடர்ந்து பொங்கல் விழாவில் மாறுவேட போட்டிகள், சிறுவர், பெரியவர்களுக்கான கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: 'அதிமுக வெற்றிக்கு உதவிய திமுக எம்எல்ஏ ரகுபதிக்கு கோடான கோடி நன்றி'