தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நீர்நிலை ஆக்கிரமிப்பு விவகாரம்: நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை - Thakkalai Water Body Public Issue

கன்னியாகுமரி: நீர்நிலைப் பகுதியை ஆக்கிரமித்து வர்த்தகக் கட்டடம் கட்டுவதைத் தடுத்துநிறுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

water body public issue கன்னியாகுமரி நீர்நிலை ஆக்கிரமிப்பு விவகாரம் தக்கலை நீர்நிலை ஆக்கிரமிப்பு விவகாரம் நாகர்கோவில் நீர்நிலை ஆக்கிரமிப்பு விவகாரம் Kanniyakumari Water Body Public Issue Thakkalai Water Body Public Issue Nagercoil Water Body Public Issue
Thakkalai Water Body Public Issue

By

Published : Jan 19, 2020, 10:31 PM IST

தமிழ்நாடு முழுவதும் நீர்நிலை புறம்போக்குகளை அகற்ற நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதைத் தொடர்ந்து கடந்த சில மாதங்களாக கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகளில் அலுவலர்கள் ஈடுபட்டுவந்தனர். ஆனால், தற்போது அப்பணிகளில் அலுவலர்கள் ஈடுபடவில்லை என விவசாய சங்கங்கள் குற்றஞ்சாட்டிவருகின்றன.

இந்நிலையில், தக்கலை பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள தேசிய நெடுஞ்சாலையில் நீர்நிலைப் பகுதியை தனி நபர்கள் ஆக்கிரமித்து வர்த்தக நிறுவன கட்டடம் கட்டிவருவதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர். இது குறித்து செய்தியாளர்களிடம் பொதுமக்கள் கூறுகையில், உரிய ஆவணங்கள் இன்றி கட்டடம் கட்டுகின்றனர். இது தொடர்பாக தேசிய நெடுஞ்சாலை துறை அலுவலர்கள் உடனடியாக நடவடிக்கை வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

நடவடிக்கை எடுக்கக் கோரிக்கைவிடுக்கும் பொதுமக்கள்

ABOUT THE AUTHOR

...view details