கன்னியாகுமரி மாவட்டத்தில் புகழ்பெற்ற கோயில்களில் ஒன்று பூதலிங்க சாமி கோயில். பஞ்ச பூதங்களும் பூதலிங்க சாமியை வணங்கியதாக புராணங்கள் கூறுகின்றன. இத்தகைய சிறப்பு வாய்ந்த இந்த கோயிலில் வருடம் தோறும் தை திருவிழா நடைபெறும்.
அதன்படி கடந்த தை மாதம் 6ஆம் தேதி கொடியேற்றத்துடன் தை திருவிழா தொடங்கியது. திருவிழாவின் 9ஆவது நாளான இன்று (ஜன.27) தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது.