இந்துக்களின் முக்கிய விசேஷ நாட்களில் ஒன்றான தை அமாவாசையையொட்டி நெல்லை, தூத்துக்குடி, கேரளா உள்ளிட்ட இடங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் முக்கடலும் சங்கமிக்கும் கன்னியாகுமரி கடற்கரையில் குவிந்தனர். அதிகாலையிலேயே புனித நீராட கடற்கரைக்கு வந்தனர்.
அங்கு வேத விற்பனர்கள் மூலம் முன்னோர்களுக்கு பலிகர்மம் பூஜை செய்தனர். வாழை இலையில் பச்சரிசி, பூ, தர்ப்பை புல், எள் போன்றவற்றை வைத்து அவற்றை தலையில் சுமந்துச் சென்று கடலில் போட்டு மீண்டும் புனித நீராடினர்.