கன்னியாகுமரி: மார்த்தாண்டம் அருகே கோட்டகம் ஸ்ரீ கிருஷணசுவாமி திருக்கோவில் நிர்வாகம் சார்பில் அமைக்கப்பட்ட திருமண மண்டபத்தை தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் திறந்து வைத்தார். முன்னதாக கோட்டகம் ஸ்ரீகிருஷ்ணசுவாமி திர்க்கோவிலில் சாமி தரிசனம் செய்தார். பின்னர், ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
“பெண்களுக்காக மிகப்பெரிய கொள்கையை வகுத்துக் கொடுத்தவர் பாரதி ஜி 20 மாநாடு குறித்து ஆலோசனைக் கூட்டத்தில் பிரதமர் ஜி 20 உலக மாநாட்டில் இந்தியா தலைமை தாங்கும் செய்தியை கிராமந்தோறும் எடுத்துரைக்க வேண்டுமென்று கூறினார். தமிழ்நாட்டில் 4 இடங்களிலும், ஹைதராபாத்தில் 6 இடங்களிலும், புதுவையில் 1 இடத்தில் என மொத்தம் 200 மாநாடுகள் நடைபெறவுள்ளது.
இந்த மாநாட்டில் இளைஞர்கள் தங்கள் படைப்புகளைக் காட்சிப் படுத்த முடியும். ஆளுநராக இருப்பதால் மதம் சார்ந்து பேசமுடியாது அனைத்து மதநிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு வாழ்த்துக்களைச் சொல்கிறேன். தமிழ்நாட்டை ஆண்டு கொண்டிருப்பவர்கள் ஏன் தீபாவளி, விநாயகர் சதுர்த்தி விழாக்களுக்கு வாழ்த்துக் கூறுவதில்லை என்பதற்கு தனக்கு விடை கிடைக்காமல் உள்ளது. எம்மதமும் சம்மதம் என்ற கொள்ளையை அனைவரும் கடைப்பிடிக்கவேண்டும்” என்றார்.