தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

Viral video : பள்ளி மாணவர்களை மதமாற்றம் செய்ய முயன்ற ஆசிரியை பணியிடை நீக்கம் - மதமாற்றம்

கன்னியாகுமரியில் பள்ளி மாணவர்களை மதமாற்றம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டு வந்த ஆசிரியை ஒருவர் கல்வித்துறை அதிகாரிகளால் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

மதமாற்றம்
மதமாற்றம்

By

Published : Apr 13, 2022, 4:25 PM IST

Updated : Apr 14, 2022, 11:23 AM IST

கன்னியாகுமரி: கண்ணாட்டுவிளை பகுதியில் அமைந்துள்ளது அரசு மேல்நிலைப்பள்ளியில் 300-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்தப் பள்ளியில் தையல் கலை ஆசிரியை தையல் வகுப்புக்கு வரும் மாணவிகளிடம் கிறிஸ்தவ மத பிரார்த்தனைகளை சொல்லி பிரார்த்தனை செய்ய வற்புறுத்துவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இந்நிலையில் நேற்றும் (ஏப்.12) தையல் வகுப்பிற்குச் சென்ற மாணவிகளிடம் இதே நடவடிக்கையில் அந்த ஆசிரியை ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து மாணவிகள் உடனடியாக தங்கள் பெற்றோருக்கு தகவல் அளித்துள்ளனர்.

மாணவியின் குற்றச்சாட்டு

இதனையடுத்து பெற்றோர் இரணியல் காவல் துறையினருக்கு தகவலளித்து, அவர்களுடன் பள்ளிக்கு சென்று தலைமையாசிரியரிடம் புகார் அளித்தனர். தொடர்ந்து காவல் துறையினர் விசாரணை நடத்தியதில் மாணவிகள் ஆசிரியையின் செய்கைகள் குறித்த குற்றச்சாட்டை முன்வைத்தனர்.

மேலும், தலைமை ஆசிரியர் முன் காவல் துறையினர், மாணவி ஒருவரிடம் விசாரணை நடத்தும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இது குறித்து விசாரணை மேற்கொண்ட கல்வித்துறை அதிகாரிகள் ஆசிரியையை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க:போலி தமிழ்நாட்டு மதிப்பெண் சான்றிதழ்; அரசு பணியில் சேர்ந்த இருவர் கைது

Last Updated : Apr 14, 2022, 11:23 AM IST

ABOUT THE AUTHOR

...view details