தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆசை வார்த்தை கூறி சிறுமி வன்கொடுமை: டீ மாஸ்டர் போக்சோ சட்டத்தில் கைது! - பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை

கன்னியாகுமரி மாவட்டத்தில் 15 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் டீக்கடை மாஸ்டர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

pocso act
டீ மாஸ்டர் போக்சோ சட்டத்தில் கை

By

Published : Jul 11, 2023, 8:06 PM IST

கன்னியாகுமரி: பூதப்பாண்டி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 15 வயது சிறுமி. 10-ஆம் வகுப்பு படித்து வருகிறார். அண்மையில் பள்ளிக்கு சென்ற சிறுமி திடீரென வகுப்பறையில் மயங்கி விழுந்துள்ளார். பின்னர் அவரை மீட்ட ஆசிரியர்கள் மற்றும் சக மாணவர்கள் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், சிறுமி கர்ப்பமாக இருப்பதாக கூறினர்.

இதனால் அதிர்ச்சியடைந்த ஆசிரியர்கள் மற்றும் சிறுமியின் பெற்றோர் மாணவியிடம் இது குறித்து விசாரணை நடத்தினர். அப்போது, அந்த சிறுமி, " 52 வயது நபர் ஒருவர் தன்னிடம் நெருங்கி பழகியதாகவும், பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் கூறினார். மேலும், இந்த விவகாரத்தை வெளியே கூறினால் கொன்று விடுவதாக மிரட்டியதாகவும் அதனாலேயே பயந்து போய் வெளியே சொல்லாமல் இருந்ததாக மாணவி கதறி அழுதபடி" பெற்றோரிடம் தெரிவித்தார்.

இதையும் படிங்க:அதீத செலவில் நடக்கும் பொதுக்கூட்டங்களால் என்ன பயன்? தேர்தலில் புழங்கும் பணம்: இது தான் உண்மையான ஜனநாயகமா?

பின்னர், மாணவியின் பெற்றோர் நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்ட போது, புகாருக்கு ஆளான நபர் அத்துமீறி மாணவியிடம் பலமுறை பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது. விசாரணைக்கு பிறகு அவரை கைது செய்த போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைந்தனர்.

கைது செய்யப்பட்ட அந்த நபர் நாகர்கோவில் பகுதியில் உள்ள டீக்கடை ஒன்றில் டீ மாஸ்டராக வேலை பார்த்து வந்த நிலையில் அவர் தற்போது சிறுமியை வன்கொடுமை செய்த வழக்கில் சிறையில் கம்பி எண்ணிக்கொண்டிருக்கிறார்.

இதையும் படிங்க:சர்வசாதாரணமாக உலா வரும் காட்டு எருமை - அச்சத்தில் கோத்தகிரி மக்கள்

ABOUT THE AUTHOR

...view details