தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jun 14, 2021, 2:45 AM IST

ETV Bharat / state

டாஸ்மாக் திறப்பு: முறையான பாதுகாப்பு இல்லையென சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு!

கன்னியாகுமரி: டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட உள்ள நிலையில், முறையான பாதுகாப்பு இல்லையென சமூக ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

முறையான பாதுகாப்பு இல்லையென சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு!
முறையான பாதுகாப்பு இல்லையென சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு!

தமிழ்நாட்டில் கரோனா தொற்று தாக்கம் குறைந்து வருகிறது. இந்நிலையில், தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அறிவித்துள்ள அரசு, நோய்த்தொற்று பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களை தவிர பிற அனைத்து மாவட்டங்களிலும் இன்று (ஜூன் 14) டாஸ்மாக் கடைகளை திறக்க உத்தரவிட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தைப் பொறுத்தவரை 147 டாஸ்மாக் கடைகள் இயங்கின்றன. இங்குள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளும் நாளை திறக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், மாவட்டத்தில் உள்ள எந்த ஒரு டாஸ்மாக் கடைகளிலும் சுத்தப்படுத்தும் பணி, பாதுகாப்பு பணி நடைபெறவில்லை.
குறிப்பாக, நாகர்கோவில் மாநகரின் முக்கிய பகுதிகளான வடசேரி, மீனாட்சிபுரம், செட்டிக்குளம் உள்ளிட்ட கடைகளில் எப்போதும் மது பிரியர்களின் கூட்டம் கணிசமாக காணப்படும். அந்தக் கடைகள் அனைத்தும் தூசி படிந்தும் சுகாதாரம் இன்றியும் காணப்படுகின்றது.
மேலும், கூட்டத்தை கட்டுப்படுத்தவும், தகுந்த இடைவெளியைக் கடைப்பிடிக்கவும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படாத நிலையில் இன்று கடைகள் திறக்கப்பட்டு கூட்டம் அதிகரித்தால் நோய்த் தொற்று பரவல் கணிசமாக உயரும் என்று தெரிகிறது.

முன்னதாக, எதிர்க்கட்சியாக இருந்த காலக்கட்டத்தில் மதுக்கடைகளை திறப்பது தேவைதானா என தற்போதைய முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கேள்வி எழுப்பினார். தற்போது, தளர்வுகளற்ற ஊரடங்குக் காலத்தில் டாஸ்மாக் கடைகளை திறக்க உத்தரவிட்டுள்ளார். இதற்கு, முறையான பாதுகாப்பு, சுகாதார வசதிகள் கூடச் செய்யாமல் டாஸ்மாக் கடைகளை திறப்பது கண்டிக்கத்தக்கது என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இதையும் படிங்க: ஆவின் பாலகங்களில் பால்வளத்துறை அமைச்சர் திடீர் ஆய்வு!

ABOUT THE AUTHOR

...view details