கன்னியாகுமரி மாவட்ட டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் சார்பில் 14 அம்சக் கோரிக்கையை வலியுறுத்தி டாஸ்மாக் கடைகள் முன்பு தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்டம் ஜேம்ஸ்டவுண் டாஸ்மாக் கடை முன்பு மூன்றாம் நாளாக இன்று(ஆகஸ்ட் 19) போராட்டம் நடைபெற்றது.போராட்டத்திற்கு தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க மாநில துணைப் பொதுச் செயலாளர் சந்திரசேகர் தலைமை தாங்கினார். தமிழ்நாடு அரசு எஸ்சி, எஸ்டி பணியாளர் நலச் சங்க மாநில இணைச்செயலாளர் அருள், தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்க மாவட்ட செயலாளர் நம்பி ஆகியோர் முன்னிலை வகித்தனர்..
3-வது நாளாக டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் போராட்டம் - தொழிலாளர்கள் போராட்டம்
கன்னியாகுமரி: 14 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் கடைகள் முன்பு டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் சார்பில் இன்று(ஆகஸ்ட் 19) மூன்றாம் நாளாக தொடர் போராட்டம் நடைபெற்றது.
TASMAC workers association protest
இந்த போராட்டத்தின் போது, கரோனாவால் உயிரிழந்த டாஸ்மாக் பணியாளர்களுக்கு ரூ 50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும், இறந்தவர்களின் வாரிசுகளுக்கு அரசு வேலை வழங்க வேண்டும், நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு செலவில் உயர்தர சிகிச்சை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.