கன்னியாகுமரி மாவட்ட டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் சார்பில் காரோனாவால் இறந்த டாஸ்மாக் பணியாளர்களின் குடும்பத்திற்கு ரூ 50 லட்சம் வழங்க வேண்டும். குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். டாஸ்மாக் பணியாளர்களுக்கு பணி நிரந்தரம் உறுதி செய்யப்பட வேண்டும், உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்று வந்தது. கடந்த ஐந்து நாட்களாக நடைபெற்று வந்த போராட்டம் இன்றுடன் (ஆகஸ்ட் 21) நிறைவடைந்தது.
முடிவுக்கு வந்த டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம் - டாஸ்மாக் ஊழியர்கள் சங்கம்
கன்னியாகுமரி: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ஐந்து நாட்களாக நடைபெற்று வந்த டாஸ்மாக் ஊழியர்களின் போராட்டம் இன்று (ஆகஸ்ட் 21) நிறைவடைந்தது. மேலும் அடுத்த கட்ட போராட்டம் குறித்து நாளை (ஆகஸ்ட் 22) முடிவு செய்யப்பட உள்ளது.
Tasmac employees protest ended in Kanniyakumari
மேலும் நாளை (ஆகஸ்ட் 22) நடைபெறும் டாஸ்மாக் குழுக்கூட்டத்தில் அடுத்தகட்ட போராட்டம் குறித்து முடிவு செய்வதுடன் வரும் ஆகஸ்ட் 25 ஆம் தேதி இரண்டு மணிநேரம் டாஸ்மார்க் கடை அடைப்பு போராட்டம் நடத்தவும் டாஸ்மாக் பணியாளர்கள் முடிவு செய்துள்ளனர்.