கன்னியாகுமரி: டாஸ்மாக் கடைகள் திறப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக எம்எல்ஏ எம்.ஆர்.காந்தி தனது வீட்டு முன்பு கருப்புக் கொடி ஏந்தி போராட்டம் நடத்தினார்
தமிழ்நாட்டில் கரோனா இரண்டாம் அலை பரவலை கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு கடந்த இரண்டு வாரமாக முழு ஊடரங்கை பிறப்பித்தது. அதனை தொடர்ந்து இன்று (ஜூன்.13) முதல் பல்வேறு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.
அதனடிப்படையில் கரோனா தொற்று குறைவாக காணப்படும் மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகளை திறக்க அரசு இன்று (ஜூன்.13) முதல் அனுமதி வழங்கியது. இதற்கு பாஜக உள்பட பல்வேறு கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.
இந்நிலையில், டாஸ்மாக் கடைகளை திறக்க எதிர்ப்பு தெரிவித்து நாகர்கோவில் தொகுதி பாஜக எம்எல்ஏ எம்.ஆர்.காந்தி தனது வீட்டின் முன்பு கருப்புக்கொடி ஏந்தி போராட்டம் நடத்தினார். இதில் மாவட்ட பொருளாளர் முத்துராமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.