தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஈரானில் தவிக்கும் மீனவர்கள்: கறுப்புக்கொடி கட்டி போராட்டம் - கருப்புக்கொடி கட்டி போராட்டம்

கன்னியாகுமரி: ஈரானில் சிக்கித்தவிக்கும் தமிழ்நாடு மீனவர்களைப் போர்க்கால அடிப்படையில் மீட்டு தமிழ்நாடு கொண்டுவர வேண்டி கன்னியாகுமரி மீனவ கிராமங்களில் தங்களது வீடுகளில் கறுப்புக்கொடி கட்டி போராட்டம் நடைபெற்றுவருகிறது.

பங்குத்தந்தை மதன்
பங்குத்தந்தை மதன்

By

Published : Mar 21, 2020, 12:08 PM IST

உலகம் முழுவதும் அச்சுறுத்திக்கொண்டிருக்கும் கரோனா வைரஸ் ஈரான் நாட்டில் தற்போது வேகமாகப் பரவி பெரும் உயிரிழப்பை ஏற்படுத்திவருகிறது.

அந்நாட்டில் சிக்கித்தவிக்கும் 700-க்கும் மேற்பட்ட தமிழ்நாடு மீனவர்களைத் தாயகம் கொண்டுவருவதற்கு அவர்களின் உறவினர்கள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுவருகின்றனர்.

கறுப்புக்கொடி கட்டி போராட்டம்

இந்நிலையில் இதுவரை மீனவர்கள் தாய்நாட்டிற்கு அழைத்து வரப்படவில்லை. மேலும் ஈரான் நாட்டில் சிக்கித் தவிக்கும் தமிழர்களுக்கு உணவு கிடைக்கவும், அவர்களை மீட்கவும் மாநில அரசு மத்திய அரசிற்கு பல்வேறு அழுத்தங்கள் கொடுத்த பிறகும் மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காத காரணத்தால் மத்திய அரசை கண்டித்து கன்னியாகுமரி மாவட்ட மீனவ கிராமங்களில் உள்ள வீடுகளில் கறுப்புக்கொடி ஏற்றி கறுப்புக்கொடி போராட்டம் நடத்திவருகின்றனர்.

பங்குத்தந்தை மதன்

இந்தப் போராட்டம் ஈரானில் சிக்கித் தவிக்கும் மீனவர்கள் மீட்கப்படும்வரை தொடர்ந்து நடைபெறும் என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: கரோனா அச்சுறுத்தல்: தமிழக-ஆந்திர எல்லையில் அமைச்சர் ஆய்வு

ABOUT THE AUTHOR

...view details