குமரியில் தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ். அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “மதசார்பற்ற கூட்டணியின் வெற்றி வாய்ப்பு நாளுக்குநாள் பிரகாசமாகி வருகிறது. காங்கிரஸ் தேர்தல் அறிக்கை அனைத்து தரப்பு மக்களையும் சென்றடைந்துள்ளது. வரும் 2030ஆம் ஆண்டு நாட்டில் வறுமையே இருக்காது. இது சாத்தியமா என்று சிலர் கேட்கிறார்கள், நாட்டின் வருமானம் சுமார் ரூ. 230 லட்சம் கோடி ஆகும். இது ரூ. 400 லட்சம் கோடியாக அதிகரிக்க வாய்ப்புள்ளது. இவற்றில் ரூ 3.5 லட்சம் கோடியை இலவசமாக கொடுக்க முடியும். இலவசம் மக்களை சோம்பேறி ஆக்கிவிடும் என்பது தவறான கருத்து.
‘நாங்கள் ராமர் கோயில் கட்டுவோம்’ - தமிழக காங். தலைவர் அதிரடி! - ramar temple
கன்னியாகுமரி: பாஜக எப்போதும் ராமருக்கு கோயில் கட்டாது என்றும், காங்கிரஸ் கட்சியால் மட்டுமே ராமருக்கு கோயில் கட்ட முடியும் எனவும் தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.
மக்களின் அடிப்படை தேவையை பூர்த்தி செய்யவும், வாழ்க்கை தரத்தை உயர்த்தவும் ரூ. 6,000 கொடுப்பதாக அறிவித்துள்ளோம். நாடு பிரதமர் கையில் பத்திரமாக உள்ளது என்று அமித் ஷா கூறுகிறார். ரஃபேல் போர் விமான ஊழல் பற்றிய கோப்புகளை பாதுகாக்க முடியாதவர்கள் எப்படி நாட்டை பாதுகாப்பார்கள். பிரதமர் கையில் நாடு பத்திரமாக உள்ளதாக தொடர்ந்து முதல்வர் பழனிசாமியும் கூறி வருகிறார். அவர் பிரதமர் கையில் பத்திரமாக இருக்கிறாரா? அல்லது கரும்புச்சக்கை போன்று அவர் பிரதமரால் பிழியப்படுகிறாரா?” என கேள்வி எழுப்பினார்.
மேலும், சுமார் 400 ஆண்டுக்கு முன்பு ராமர் கோயிலை இடித்துவிட்டு பாபர் மசூதியை கட்டினார், நாகரீகம் வளர்ந்துவிட்ட இந்த காலத்தில் அதே இடத்தில் மசூதியை இடித்து கோயில் கட்டுவோம் என்பது எந்த வகையில் நியாயமாக இருக்க முடியும் என்றார். மேலும், பாஜக ஒருபோதும் ராமர் கோயில் கட்ட மாட்டார்கள், அப்படி கட்டினால் பாஜக என்ற கட்சி தேவை இல்லாமல் போய்விடும் என கூறிய அவர், காங்கிரஸ் கட்சியே ராமர் கோயில் கட்டும் என்றும் தெரிவித்தார். பிரச்னைக்கு உரிய இடத்தில் அல்லாமல் பொது இடத்தில் ராமர் கோயிலை காங்கிரஸ் கட்டும், என்றார்.