தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விவசாயிகளின் போராட்டம் அவர்களின் உரிமைக்கானது - விஜய் வசந்த்

டெல்லியில் விவசாயிகள் 70 நாட்களுக்கு மேலாக போராடி வருகின்றனர் என்றும் அவர்களின் போராட்டம், அவர்களின் உரிமைக்கானது எனக்கூறிய தமிழ்நாடு காங்கிரஸ் பொதுச்செயலாளர் விஜய் வசந்த், விவசாயிகளை காவல் துறை கொண்டு மத்திய அரசு ஒடுக்குவது சரியல்ல என்றார்.

tamilnadu congress committee general secretary vijay vasanth
tamilnadu congress committee general secretary vijay vasanth

By

Published : Feb 10, 2021, 4:49 PM IST

கன்னியாகுமரி: குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும், வேளாண் சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தியும் நாகர்கோவிலில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

வடசேரி அண்ணா விளையாட்டு அரங்கம் முன்பு நடந்த இப்போராட்டத்திற்கு, தமிழ்நாடு காங்கிரஸ் பொதுச்செயலாளர் விஜய் வசந்த் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். இந்த போராட்டத்தின்போது டெல்லியில் உயிரிழந்த விவசாயிகளின் உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

மினி கிளினிக்கில் ஊழியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படமாட்டார்கள்!

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விஜய் வசந்த், “டெல்லியில் விவசாயிகள் 70 நாட்களுக்கும் மேலாக போராடி வருகின்றனர். ஆனால் விவசாயிகள் மீது அரசாங்கத்தின் தூண்டுதலின் பேரில் காவல் துறையினர் தடியடி நடத்தியுள்ளனர். இதனால் பலர் உயிரிழந்துள்ளனர்.

விஜய் வசந்த் பேட்டி

விவசாயிகள் தங்களது வாழ்வாதாரத்திற்கு தங்களின் உரிமையை கேட்டுள்ளனர். அந்த போராட்டத்திலேயே விவசாயிகள் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். இவ்வாறு உயிரிழந்தவர்களுக்கு வீரவணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறேன். மத்திய அரசு 3 வேளாண் சட்டங்களை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்” என்று கூறினார்.

ABOUT THE AUTHOR

...view details