கன்னியாகுமரி அருமனை பகுதியில் நடைபெற உள்ள பொங்கல் பண்டிகை விழாவில் பங்கேற்பதற்காக தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் நேற்று கன்னியாகுமரி வந்தடைந்தார்.
பொங்கல் விழாவில் பங்கேற்ற தமிழிசை சவுந்தரராஜன்
கன்னியாகுமரி: பொங்கல் விழாவில் பங்கேற்பதற்காக தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் நேற்று கன்னியாகுமரி வந்தார்.
பின்னர், கன்னியாகுமரி விருந்தினர் மாளிகைக்கு சென்ற அவரை துப்பாக்கி ஏந்திய காவல்துறையினர் மரியாதை செலுத்தி வரவேற்றனர். மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு . வடநேரே பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். அப்போது வருவாய் துறை அலுவலர்கள், பாஜகவினர் உடனிருந்தனர். குமரி பகவதியம்மன் கோயிலுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்த தமிழிசை சௌந்தரராஜன், பின்னர் அருமனையில் நடைபெற்ற பொங்கல் விழாவில் பங்கேற்றார்.
இதையும் படிங்க: 'பழைய துணி கொண்டு வந்தால் துணிப்பை தருகிறோம்' - பிளாஸ்டிக்கை ஒழிக்க புதுத்திட்டம்
TAGGED:
Governer