கன்னியாகுமரி: ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் குமரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். கன்னியாகுமரி கோவளத்தில் அமைக்கப்பட உள்ள முன்மாதிரி வட்டார வளர்ச்சி மையம் தொடர்பான ஆய்வை மேற்கொண்டார். ஆய்வின்போது தொடர்புடைய துறை அலுவலர்களிடம் வளர்ச்சி மையம் அமைப்பது குறித்த விளக்கங்களைக் கேட்டறிந்தார்.
அதனைத்தொடர்ந்து, நுள்ளிவிளை ஊராட்சிக்குட்பட்ட கண்டன்விளை அரசுப்பள்ளியில் புதிதாக கட்டப்பட்டுள்ள உள்விளையாட்டு அரங்கினை திறந்து வைத்தார். பின்னர் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அரசு துறை அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
முன்னதாக செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர், 'தமிழ்நாட்டில் அனைத்து கிராமங்களுக்கும் மின்சார வசதியை கொண்டு சேர்த்த பெருமை முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியை சாரும். அதே போல இணைப்புப்பாலங்கள் மூலம் குக்கிராமங்கள் வரை சாலைகளை அமைத்த அரசு திமுக அரசு. தரை மட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் மின்சார வசதி செய்யப்பட்டுள்ளது. மின்சாரம் இல்லாத கிராமங்கள் மலைப்பகுதிகளாக இருக்கலாம்.