கன்னியாகுமரி:இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழ்நாட்டில், சர்வதேச 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறவுள்ளது. வரும் 28ம் முதல் ஆகஸ்ட் 10 வரை, செஸ் ஒலிம்பியாட் தொடர் மாமல்லபுரத்தில் கோலாகலமாக நடைபெறுகிறது. இதில் 200க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர்.
இதற்கான விரிவான ஏற்பாடுகளை தமிழக அரசு செய்து வருகிறது. இந்த பிரம்மாண்ட செஸ் போட்டியை பொதுமக்களுக்கு கொண்டு சேர்க்கும் வகையில், தமிழகம் முழுவதும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன. இந்தப் போட்டி குறித்து நாடு முழுவதும் விழிப்புணாவு ஏற்படுத்தும் வகையில் கடந்த 19-ஆம் தேதி செஸ் ஒலிம்பியாட் ஜோதியை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.