தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழ்நாட்டில் தான் அதிக குற்றச்சம்பவங்கள் நடக்கின்றன - அண்ணாமலை - bjp

இந்திய அளவில் தமிழ்நாட்டில் தான் குற்றச்சம்பவங்கள் அதிகமாக நடப்பதாக தரவுகள் உள்ளன என பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

அண்ணாமலை பேட்டி
அண்ணாமலை பேட்டி

By

Published : Sep 6, 2022, 10:22 PM IST

கன்னியாகுமரி: இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் குற்றச்சம்பவங்கள் அதிகமாக நடப்பதாக தரவுகள் உள்ளது. ஆனால், முதலமைச்சர் சட்டம் ஒழுங்கு சரியாக உள்ளது எனக் கூறுவதை ஏற்க முடியாது என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்ற பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை நாகர்கோவிலில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர் கூறுகையில், ”சமூக ஊடகங்களைக் கண்காணிக்க காவல்துறை சார்பில் குழு அமைக்கப்பட்டது வரவேற்கத்தக்கது. ஆனால், அது நடுநிலையோடு நேர்மையாக செயல்பட வேண்டும். இந்திய அளவில் தமிழ்நாட்டில் தான் குற்றச்சம்பவங்கள் அதிகமாக நடப்பதாக தரவுகள் உள்ளன. முதலமைச்சர் சட்டம் ஒழுங்கு சரியாக உள்ளது எனக் கூறுவதை ஏற்க முடியாது.

70 ஆண்டுகள் கால காங்கிரஸ் ஆட்சியில் இந்தியா சீரழிந்ததை எட்டு ஆண்டு கால மோடி ஆட்சியில் எப்படி வளர்ச்சி பெற்றது? என்பதை ராகுல் காந்தி தனது பாதயாத்திரையில் தெரிந்து கொள்வார். நீட் தேர்வினை எந்த காலத்திலும் ரத்து செய்ய முடியாது. திமுகவினர் நடத்தும் மருத்துவ கல்லூரிகளுக்காக நீட் தேர்வை ஒருபோதும் ரத்து செய்ய முடியாது.

மத்திய அரசு கண்டிப்பாக கச்சத்தீவை மீட்க நடவடிக்கை எடுக்கும். பல காலகட்டங்களில் அதிமுக பல்வேறு பிரிவுகளாக பிரிந்துள்ளது. தமிழ்நாட்டில் அதிக முறை ஆட்சி செய்த கட்சி அதிமுக, அதனை குறைத்து மதிப்பிடக்கூடாது” எனத் தெரிவித்தார்.

அண்ணாமலை பேட்டி

கனிம வள கடத்தல் குறித்த கேள்விக்கு, ”கனிமவள கடத்தலைத் தடுக்க முடியவில்லை என்றால் மத்திய அரசிடம் நிர்வாகத்தை எழுதிக்கொடுத்து விடுங்கள். நாங்கள் தடுத்து நிறுத்துகிறோம்”, எனக் கூறினார்.

இதையும் படிங்க:அப்பன் காசை மகளுக்கு கொடுப்பது தான் புதுமைப் பெண் திட்டமா; நெல்லையில் சீமான் கடும் விமர்சனம்

ABOUT THE AUTHOR

...view details