தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

‘குடியுரிமை திருத்தச் சட்டத்தை வாபஸ் பெறவேண்டும்’ - Opposition to the Citizenship Amendment Act

கன்னியாகுமரி: குடியுரிமை திருத்தச் சட்டத்தை வாபஸ் வாங்கும் வரை போராட்டம் தொடரும் என தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தினர் தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அறிவிப்பு
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அறிவிப்பு

By

Published : Jan 5, 2020, 11:19 PM IST

தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் மாநில செயற்குழு கூட்டம் கன்னியாகுமரி அருகே உள்ள மாதவபுரத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கேரளா, தமிழ்நாடு, புதுச்சேரி, கர்நாடகா போன்ற பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இந்த செயற்குழுக் கூட்டத்திற்கு பின்னர் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் மாநில பொதுச்செயலாளர் இ.முகமது செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது, "இந்தியாவை மத ரீதியாக பிளவுபடுத்தும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை வாபஸ் பெற வேண்டும். இதனை வாபஸ் வாங்கும் வரை போராட்டம் தொடரும். நாடாளுமன்றத்தில் இந்தச் சட்டம் நிறைவேறுவதற்கு அதிமுக அரசும் ஒரு காரணமாக உள்ளது" என்றார்.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அறிவிப்பு

இதையும் படிங்க: தமிழ்நாடு பாஜகவின் அடுத்த தலைவர் யார்? - கமலாலயத்தில் தீவிர ஆலோசனை

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details