கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக குமரி மாவட்டம் அஞ்சுகிராமத்திற்கு வருகை தந்த இயக்குனர் எஸ்.ஏ. சந்திரசேகர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அதில், இந்தியாவில் அனைத்து மதத்தினரும் ஒற்றுமையாக வாழ்ந்து வருகிறார்கள். இந்தச் சூழலில் குடியுரிமை திருத்தச் சட்டம் இந்தியாவிற்கு தேவையில்லை. மத்திய அரசுஇதுகுறித்து மக்களிடம் இதுவரை விரிவாக விளக்கமும் அளிக்கவில்லை.
குடியுரிமை திருத்தச் சட்டம்: உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக விளைவைச் சந்திக்கும்! - அதிமுகவை விமர்சித்த எஸ்.ஏ.சந்திரசேகர்
கன்னியாகுமரி: மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு அதிமுக அரசு ஆதரவு அளித்துள்ளதின் தாக்கம் உள்ளாட்சி தேர்தலில் எதிரொலிக்கும் என இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
director chandrasekar
எந்த வித பாதிப்பும் இல்லை என்று கூறும் மத்திய அரசு எதற்காக இந்தச் சட்டத்தை இயற்றியுள்ளது. இந்தியாவில் மதவாத ஆட்சிக்கு பாஜக அரசு முயற்சி செய்து வருகிறது. அது ஒருபோதும் நடக்காது. மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்தை அதிமுக ஆதரித்திருப்பதால், தற்போது நடைபெறும் உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக அரசுக்கு எதிராக எதிரொலிக்கும் என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: 'குற்றப் பரம்பரை'க்காக இணையும் பாரதிராஜா-சுரேஷ் காமாட்சி கூட்டணி