சர்வதேச சுற்றுலா தலமான முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரிக்கு தினமும் நூற்றுக்கணக்கான உள்நாட்டு, வெளிநாட்டு பயணிகள் வருகை தருகின்றனர். கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக கடலில் அமைந்துள்ள விவேகானந்தர் பாறை, திருவள்ளூர் சிலை உள்ளது. அங்கு பயணிகள் படகுகளில் சென்று கண்டுகளித்து வருவது வழக்கம்.
கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக படகு போக்குவரத்து தடை செய்யப்பட்டு இருந்த நிலையில் மீண்டும் படகு போக்குவரத்தை இயக்க வேண்டும். புதிய படகுகளை பயன்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை சுற்றுலா பயணிகள், வியாபாரிகள் சார்பில் தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.