தமிழ்நாட்டில் குமரி மாவட்டம் உள்பட பல்வேறு பகுதிகளில் நடத்தப்பட்ட 'சன் ஸ்டார் அக்ரோ பார்ம்' நிதி நிறுவனத்தில், சுமார் ஆயிரத்து 600 பேர் மாதாந்திர தவணைமுறையில் பணம் செலுத்திவந்தனர்.
இந்நிலையில், அதிக வட்டி கிடைக்கும் என்ற ஆசையில் பணம் செலுத்திவந்த மக்களுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. போலியான நிறுவனத்தில் பணம் செலுத்தி ஏமாற்றம் அடைந்திருப்பது கடைசியாகத்தான் பொதுமக்கள் கண்டுபிடித்தனர்.
இதையடுத்து உடனடியாகப் பாதிக்கப்பட்டவர்கள் நாகர்கோவில் பொருளாதாரக் குற்றப்பிரிவு காவல் துறையிடம் புகார் செய்தனர். பின்னர் பொதுமக்கள் அளித்த புகாரின்பேரில், பொருளாதாரக் குற்றப்பிரிவு தீவிர விசாரணை நடத்தினர். அதில், பல நபர்களிடமிருந்து ரூ. 10 கோடி மோசடி செய்தது தெரியவந்தது.