உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கரோனா வைரஸ் காரணமாக பொது மக்கள் பீதியுடன் காணப்படுகின்றனர். இதனால், பொதுமக்கள் தேவையில்லாமல் வெளியே வரவேண்டாம் எனவும், வெளியே செல்ல வேண்டியவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்து செல்லும்படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், குமரி மாவட்டத்தில் வேலைக்குச் செல்பவர்கள் முகமூடி அணிந்தே செல்கின்றனர். இதனால், மாவட்டத்தில் முகமூடியின் தேவை அதிகரித்துள்ளது. எனவே, முகமூடிகளை விற்பனை செய்யும் மருந்து கடைகள் அதிரடியாக, அதன் விலையை உயர்த்தியதாக ஏராளமான புகார்கள் பொதுமக்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு வந்தது.