தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சாதி ரீதியாக தகாத வார்த்தைகளால் பேசும் கல்லூரி முதல்வருக்கு எதிராக மாணவிகள் போராட்டம்!

சாதி ரீதியாகவும், ஓரினசேர்க்கை பற்றியும் மிகவும் அருவருக்கத்தக்க வார்த்தைகளால் பேசும் கல்லூரி முதல்வருக்கு எதிர்ப்புத் தெரிவித்து மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஜாதி ரீதியாக தாகத வார்த்தைகளால் பேசும் கல்லூரி முதல்வருக்கு எதிராக மாணவிகள் போராட்டம்!
ஜாதி ரீதியாக தாகத வார்த்தைகளால் பேசும் கல்லூரி முதல்வருக்கு எதிராக மாணவிகள் போராட்டம்!

By

Published : May 30, 2022, 5:21 PM IST

கன்னியகுமாரி: நாகர்கோவில் அருகே சுங்கான் கடையிலுள்ள சேவியர் தனியார் நர்சிங் கல்லூரியில் படிக்கும் விடுதி மாணவிகளை கல்லூரி முதல்வர் ரீனா இவான்ஸி சாதி ரீதியாகவும், மிகவும் அருவருக்கத்தக்க வார்த்தைகளால் தரக்குறைவாகவும் பேசுவதுடன் ’ஒன்றாக ஒரே அறையில் மாணவிகள் உறங்கினால், அவர்களுக்கு குழந்தை பிறந்துவிடும்’ என அருவருக்கத்தக்க வார்த்தைகளால் பேசுவதாகவும், எதற்கெடுத்தாலும் அபராதம் விதித்து மாணவிகளை மன உளைச்சலுக்கு ஆளாக்கி கஷ்டப்படுத்துவதாகவும் தெரிகிறது.

இதனால் தாங்கள் இனி இக்கல்லூரிக்கு செல்ல மாட்டோம் எனவும்; தற்கொலை செய்யப்போவதாகவும் மாணவிகள் வேதனை தெரிவித்தனர். இதுகுறித்து கல்லூரி நிர்வாகத்திடம் மாணவிகள் புகார் செய்துள்ளனர் என்ற போதிலும் இது தொடர்பாக நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை.

இந்த நிலையில் கல்லூரி முதல்வரை கண்டித்து, கல்லூரி விடுதியில் தங்கி இருக்கும் மாணவிகள் கல்லூரி அருகே பதாதைகளை ஏந்தி திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் சாதி ரீதியாகவும் தரக்குறைவாகவும் மாணவிகளை கல்லூரி முதல்வர் பேசுவதை கைவிட வேண்டும் எனவும்; அவர் மீது நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தியும் அவர்கள் முழக்கங்களை எழுப்பினார்கள்.

சாதி ரீதியாக தகாத வார்த்தைகளால் பேசும் கல்லூரி முதல்வருக்கு எதிராக மாணவிகள் போராட்டம்!

பெற்றோரும் கல்லூரி பேராசியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவர்களும் முற்றுகையிட்டதால், பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. தகவல் அறிந்து வந்த இரணியல் போலீசார் அவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

இதையும் படிங்க :கோயில் பெயரை பயன்படுத்தி ரூ. 34 லட்சம் வசூல் - பிரபல யூடியூபர் கைது!

ABOUT THE AUTHOR

...view details