கன்னியாகுமரி:அஞ்சுகிராமம் அருகே லெவிஞ்சிபுரத்தில் உள்ள கேப் பொறியியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கும் நான்காம் ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கும் இடையே ஏற்கனவே மோதல் இருந்து வந்துள்ளது. அதில் ஒருதரப்பு மாணவர்கள் திருநெல்வேலி மாவட்டம் செட்டிகுளம் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும் மற்றொரு தரப்பு மாணவர்கள் கன்னியாகுமரி மாவட்டம் தெங்கம்புதூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும் கூறப்படுகிறது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர்களை கன்னியாகுமரி மாவட்ட மாணவர்கள் தாக்கியதாக தெரிகிறது. இதற்குப் பழிக்குப் பழி தீர்க்க அவர்களுக்கிடையே கல்லூரி வளாகத்தில் பேராசிரியர்கள் கண்முன்னே திடீரென மோதல் உருவானது. ஊர் கெத்தை காட்டுவதிலும் மாணவிகளிடம் மாஸ் காட்டுவதிலும் இரண்டு கோஷ்டிகள் இடையே மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.