தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மாணவனை கண்மூடித்தனமாக தாக்கிய ஆசிரியை; போலீஸ் விசாரணை! - மாணவர் மீது தாக்குதல்

கன்னியாகுமரி: தக்கலை அருகே +2 மாணவரை கண்மூடித்தனமாக தாக்கிய ஆசிரியையிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Injured student

By

Published : Jun 19, 2019, 3:25 PM IST

கன்னியாகுமரி மாவட்டம் மைலோடு பகுதியைச் சேர்ந்த ஜெஸ்டின் ஜோஸ்-சகாய அனிதா தம்பதியரின் மகன் ஜெரின் ஜோசப் (17). வட்டம் பகுதியில் உள்ள விக்டரி மெட்ரிக்குலேசன் பள்ளியில் 12ஆம் வகுப்பு பயின்று வருகிறார்.

பள்ளி திறந்து ஒரு சில வாரங்களே ஆன நிலையில், மாணவர்களுக்கு அதிகளவு வீட்டு பாடங்களும், முக்கிய கேள்விகளுக்கான விடைகளையும் அளித்து அவைகளை மனப்பாடம் செய்து ஒப்புவிக்க ஆசிரியர்கள் அறிவுறுத்தி வந்துள்ளனர். இவ்வாறு ஒப்புவிக்காத மாணவர்களை இரவு படிப்புக்காக பள்ளியிலேயே தங்க வைத்து ஒப்புவித்த பின் வீட்டிற்கு அனுப்புவதும் வழக்கமாக இருந்து வருகிறது. இப்படி ஒவ்வொரு பாடப்பிரிவு ஆசிரியர்களும் மாணவர்களுக்கு அதிக பாடச்சுமையை கொடுத்துள்ளனர்.

விக்டரி மெட்ரிக்குலேசன் பள்ளி

இந்நிலையில் நேற்று பள்ளிக்கு சென்ற ஜெரின் ஜோசப்பிடம் மாலை வகுப்பறைக்கு வந்த இயற்பியல் ஆசிரியர் சுமிதா, தான் அளித்த வீட்டு பாடத்தை ஒப்புவிக்க கூறியுள்ளார். ஆனால் செரின் ஜோசப் ஒப்புவிக்க முடியாமல் இருந்திருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த ஆசிரியை சுமிதா அவரை சரமாரியாக கம்பால் தாக்கியுள்ளார்.

இதில் மாணவனுக்கு இடது கை மணிக்கட்டு, முழங்கை உள்ளிட்ட இடங்களில் படுகாயம் ஏற்பட்டுள்ளது. ஆனால் பள்ளி நிர்வாகம் அதை பொருட்படுத்தாமல் பள்ளியிலேயே தங்க வைத்து இரவு எட்டு மணிவரை அவர்களே வைத்தியம் செய்துள்ளனர். ஆனால் மாணவனுக்கு வலி அதிகரிக்கவும் பெற்றோரை அழைத்து ஒப்படைத்திருக்கிறார்கள். அவர்கள் மகனை சிகிச்சைக்காக தக்கலை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும் மாணவனை கண்மூடித்தனமாக தாக்கியதால் இதுகுறித்து இரணியல் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் ஆசிரியை சுமிதாவிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details