கன்னியாகுமரி மாவட்ட மனித பாதுகாப்புக் கழகம் அமைப்பைச் சார்ந்தவர்கள் நாகர்கோவிலில் மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:
குமரி மாவட்டத்தில் கரோனா தடை உத்தரவு காரணமாக எண்ணற்ற தொழிலாளர்கள் வேலைக்குச் செல்ல முடியாமல் வறுமையை சந்தித்துவருகின்றனர். இந்த நிலையைக் கருத்தில்கொண்டு கல்விக் கட்டணங்கள் யாரும் செலுத்த தேவையில்லை எனத் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.