தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

உயிர்கொல்லும் வெறி நாய் கடியிலிருந்து மீட்க நடவடிக்கை எடுங்கள்! - குமரி வெறி நாய் கடி

ஆரல்வாய்மொழி, தோவாளை உடன் சேர்த்து அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் வெறி நாய்களின் தொல்லை அதிகரித்துள்ளது.

stray dogs problem in kanyakumari, stray dogs in kanyakumari, கன்னியாகுமரி வெறி நாய் தொல்லை, குமரி வெறி நாய் கடி, வெறிநாய் கடிக்கான மருந்து
stray dogs problem in kanyakumari

By

Published : Nov 18, 2020, 2:07 PM IST

கன்னியாகுமரி: வெறிநாய் கடி காரணமாக 15க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருவதால், அதனைக் கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி, தோவாளை, செண்பகராமன்புதூர், கண்ணன் புதூர், போன்ற பகுதிகளில் சமீப காலமாக வெறிநாய் தொல்லை அதிகரித்துவருகிறது.

வெறி நாய்களை அப்புறப்படுத்த ஒரு நாய்க்கு 700 ரூபாய் வீதம் பேரூராட்சி, பஞ்சாயத்துகளிலிருந்து நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், இந்த நிதி தற்போது நிறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் வெறிநாய் கடி காரணமாக இதுவரை 15க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனையடுத்து ஊர் மக்களே களமிறங்கி கம்புகளுடன் வெறிநாய் வேட்டைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

எனவே வெறி நாய்களால் பொதுமக்கள், கால்நடைகள் பாதிக்கப்படாமல் இருக்க உடனடியாக இவற்றைப் பிடித்து மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details