தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

புயல் எச்சரிக்கை: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்!

கன்னியாகுமரி: குமரி மாவட்டத்தில் புயல், வெள்ள பாதிப்பிலிருந்து மக்களைப் பாதுகாப்பான பகுதியில் தங்கவைப்பதற்காக மாவட்டம் முழுவதும் 82 தற்காலிக முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன என்று மாவட்ட ஆட்சியர் அரவிந்த் தெரிவித்துள்ளார்.

புயல் எச்சரிக்கை: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்!
புயல் எச்சரிக்கை: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்!

By

Published : Dec 1, 2020, 1:18 PM IST

குமரி மாவட்டத்திற்கு விடுக்கப்பட்டுள்ள புயல் எச்சரிக்கை தொடர்பாக எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து மாவட்ட ஆட்சியர் அரவிந்த் செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கம் அளித்தார்.

அப்போது அவர், "வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற வாய்ப்பு உள்ளதாகவும் தென் தமிழ்நாட்டில் உள்ள மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கைவிடுத்துள்ளது.

இதனைத் தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் சிறப்பு அவசரகால கட்டுப்பாட்டு மையம் செயல்பட தொடங்கியுள்ளது. அதன்படி 1077 என்ற எண்ணில் பொதுமக்கள் புயல் பாதிப்புகள் தொடர்பான தகவல்கள் தெரிவிக்கலாம்.

புயல், வெள்ள பாதிப்பிலிருந்து மக்களைப் பாதுகாத்து பாதுகாப்பான பகுதியில் தங்கவைப்பதற்காக மாவட்டம் முழுவதும் 82 தற்காலிக முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாவட்டம் எட்டு மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு அதில் 76 பகுதிகள் பாதிப்பு ஏற்படுபவை எனக் கண்டறியப்பட்டுள்ளது. அங்கு 91 அலுவலர்கள் அடங்கிய குழுக்கள் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டுவருகின்றனர். பாதுகாப்பிற்காக சுமார் 6 ஆயிரம் மணல் மூட்டைகள் அடுக்கி தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

மீனவ கிராமங்களில் கடந்த மூன்று நாள்களுக்கு முன்னர் புயல் தொடர்பான எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அதனடிப்படையில் ஆழ்கடலில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுவரும் மீனவர்களுக்கு மீனவ அமைப்புகளுடன் இணைந்து தகவல் தெரிவித்து கரை திரும்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவருகிறது.

மாவட்டத்தில் உள்ள பேசிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றார் 1, 2 உள்ளிட்ட முக்கிய அணைகளில் தற்போது போதிய அளவு நீர் இருக்கும் நிலையில் வரும் நாள்களில் பெய்யும் மழை அளவைப் பொறுத்து அணைகளிலிருந்து நீர் திறப்பது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும். புயலை எதிர்கொள்ள போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அனைத்தும் எடுக்கப்பட்டு மாவட்ட நிர்வாகம் தயார் நிலையில் உள்ளது" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: வலுவடைந்தது 'புரெவி' புயல் சின்னம் - கனமழைக்கு வாய்ப்பு

ABOUT THE AUTHOR

...view details