கன்னியாகுமரி மாவட்டம் கடல் பகுதியில் இன்று (டிச.21) காற்றின் வேகம் காரணமாக கடல் சீற்றம் ஏற்பட்டுள்ளது.
இதனால் விவேகானந்தர் நினைவு மண்டபம், திருவள்ளுர் சிலைக்கு செல்லும் படகுப் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது. கடற்கரையோரம் பாதுகாப்பிற்காக காவல் துறையினர் நிறுத்தப்பட்டுள்ளனர்.