கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரத்தில் நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த முத்தாரம்மன் கோயில் உள்ளது. இந்தக் கோவிலுக்கு சொந்தமாக ஏராளமான தங்கம், வைர நகைகளை பாதுகாப்பிற்காக அருகிலுள்ள வங்கி லாக்கரில் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த வாரம் ஒரு பக்தர் 9 கிராம் அளவிற்கு ஒரு தங்க நெக்லஸை காணிக்கையாக கொடுத்துள்ளார்.
அந்த செய்தி வாட்ஸ் ஆப்பில் பரவியதை பார்த்துவிட்டு திருடர்கள், கோயிலுக்குள்தான் நகைகள் இருக்கும் என்று எண்ணிஇரவில் கோயில் கருவறைக்கு அருகில் உள்ள ஜன்னல் வழியாக உள்ளே நுழைய முயன்றுள்ளனர். ஆனால் கருவறை ஜன்னல் சிறியதாக இருந்ததால் உள்ளே நுழைய முடியவில்லை. இதனால் அருகில் கிடந்த கம்பை எடுத்து அம்மன் சிலையின் கழுத்திலிருந்த நகையை எடுக்க முயன்றுள்ளனர்.
ஆனால் அம்மன் கழுத்தில் நகை இல்லாததால் கோபமடைந்த கொள்ளையர்கள், அம்மன் சிலையின் முக பகுதியை சேதபடுத்திவிட்டு அங்கிருந்து சென்றுள்ளனர். மறுநாள் காலை கோயிலின் கருவறை ஜன்னல் உடைக்கப்பட்டு அம்மனின் முகம் சேதபடுத்தபட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த பூசாரி தென்தாமரைகுளம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார்.
கொள்ளை முயற்சியில் கோயில் சிலை உடைப்பு சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர், கோயிலிலுள்ள சிலை உடைக்கப்பட்டது தொடர்பாக விசாரணை மேற்கொண்டதில், ஜன்னலை உடைப்பதற்கு பயன்படுத்தப்பட்ட கம்பும், ஒரு செல்ஃபோனும் ரோட்டில் கிடந்துள்ளது. மேலும், அந்த கோயிலில் சிசிடிவி கேமரா எதுவும் பொருத்தப்படவில்லை என்பதால், கோயிலின் அருகிலுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளைக் கொண்டு ஆய்வு செய்துவருகின்றனர்.
இதையும் படிங்க:காதலியின் கணவனை கொலை செய்த திருமணத்தை மீறிய உறவில் இருந்தவர் தலைமறைவு - திருமங்கலம் அருகே பரபரப்பு