கன்னியாகுமரி மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் பொதுமக்கள் வெளியே வர ஏராளமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதனால் ஏழை, எளிய மக்கள் அரிசி, காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்கள் வாங்க முடியாமல் தவித்துவருகின்றனர்.
இதனைத் தொடர்ந்து குமரி மாவட்டத்தில் உள்ள அரசியல் கட்சிகள், சமூக ஆர்வலர்கள் சார்பில் அரிசி, காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய உணவு பொருள்கள் ஏழை மக்களுக்கு வழங்கப்பட்டுவருகின்றன.
அந்த வகையில், குமரி மாவட்டம் காட்டுப்புத்தூர் ஊராட்சியிலுள்ள நூற்றுக்கும் மேற்பட்ட ஏழை, எளிய குடும்பத்தினர் அத்தியாவசிய பொருள்கள் வாங்க முடியாமல் தவித்து வந்தனர். இதைத் தொடர்ந்து பாரத ஸ்டேட் வங்கி சார்பில் ஏழை பொதுமக்களுக்கு ஒரு மாதத்திற்குத் தேவையான அரிசி, பருப்பு உள்ளிட்ட நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டன.
பாரத ஸ்டேட் வங்கி சார்பில் கரோனா நிவாரண உதவி! - கன்னியாகுமரியில் பாரத ஸ்டேட் வங்கி சார்பில் கரோனா நிவாரண உதவி
கன்னியாகுமரி: பாரத ஸ்டேட் வங்கி சார்பில் காட்டுப்புதூர் ஊராட்சியில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட ஏழை, எளிய குடும்பங்களுக்கு கரோனா நிவாரண உதவியாக அரிசி, மளிகை பொருள்கள் வழங்கப்பட்டன.
பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்கிய பாரத ஸ்டேட் வங்கியினர்