தமிழ்நாடு

tamil nadu

ஸ்டாலினால் முதலமைச்சராக முடியாது - அன்பழகன்!

By

Published : Oct 5, 2020, 1:42 AM IST

கன்னியாகுமரி: “சுதந்திர தினத்தை டிசம்பர் 15க்கு மாற்றிய ஸ்டாலின் ஒருபோதும் முதலமைச்சர் ஆக முடியாது” என திரைப்பட இயக்குனரும் அதிமுக தலைமைக் கழக நட்சத்திர பேச்சாளருமான பி.சி. அன்பழகன் தெரிவித்துள்ளார்.

பி.சி. அன்பழகன்
பி.சி. அன்பழகன்

திரைப்பட இயக்குனரும், அதிமுக தலைமைக் கழக நட்சத்திர பேச்சாளருமான பி.சி. அன்பழகன் நேற்று (அக்.4) கன்னியாகுமரியில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறுகையில், "சுதந்திர தினத்தை டிசம்பர் 15ஆம் தேதிக்கு மாற்றிய ஸ்டாலின் ஒருபோதும் முதலமைச்சர் ஆக முடியாது. இதுதான் மக்களின் எண்ணமும் கூட. எங்கள் இயக்கம் பழுத்த பழம். களத்தில் நிற்கும்.

திமுக தொடர்பு எல்லைக்கு வெளியே போய்விட்டது. திமுகவில் எல்லோருக்கும் மூளை இருந்திருந்தால், பிகாரில் இருந்து பிரசாந்த் கிஷோர் ஏன் வரவேண்டும்?அதிமுகவில் அறிவார்ந்த விஷயங்களை அவர்களே (தலைமை) முடிவு செய்வார்கள்.

அதிமுக மீண்டும் ஆட்சியை தொடர வேண்டும் என தொண்டர்களும் மக்களும் நினைக்கிறார்கள். நல்லதே நடக்கும் என்ற எண்ணத்தில் இருக்கிறோம். குறை ஒன்றும் இல்லை. முதலமைச்சர் யார் என்பதை தலைமை தான் முடிவு செய்யும். அதில் அனுமானங்களுக்கு இடமில்லை.

இபிஎஸ், ஓபிஎஸ் எப்போதும் இணைந்து தான் இருக்கிறார்கள். அவர்கள் இணைந்து ஒரு நல்ல முடிவை எடுப்பார்கள்" என்றார்.

இதையும் படிங்க:கடின உழைப்புக்கு சொந்தக்காரர் மருத்துவர் திருவேங்கடம்: முதலமைச்சர் இரங்கல் செய்தி

ABOUT THE AUTHOR

...view details