தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

எஸ்எஸ்ஐ வில்சன் முதலாமாண்டு நினைவு நாள்: உருவப்படத்திற்கு காவல்துறை கண்காணிப்பாளர் அஞ்சலி! - எஸ்எஸ்ஐ வில்சன்

கடந்த ஆண்டு ஜன.,8 ஆம் தேதி களியக்காவிளையில் பயங்கரவாதிகள் தாக்குதலில் வீரமரணமடைந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் வில்சனின் உருவப்படத்திற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட காவல்துறையினர் அஞ்சலி செலுத்தினார்.

வில்சன் உருவப்படத்திற்கு காவல்துறை கண்காணிப்பாளர் அஞ்சலி
வில்சன் உருவப்படத்திற்கு காவல்துறை கண்காணிப்பாளர் அஞ்சலி

By

Published : Jan 9, 2021, 6:32 AM IST

கன்னியாகுமரி:குமரி மாவட்டம் தமிழ்நாடு கேரள எல்லைப் பகுதியான களியக்காவிளை சோதனை சாவடியில் கடந்த ஆண்டு ஜனவரி 8ஆம் தேதி இரவு பணியில் இருந்த மார்த்தாண்டம் பகுதியை சேர்ந்த வில்சன் என்ற சிறப்பு காவல் உதவி ஆய்வாளரை பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டும், கத்தியால் குத்தியும் படுகொலை செய்தனர்.

இது சம்பந்தமாக அப்துல் சலீம், தபுபீக் ஆகிய இரண்டு பயங்கரவாதிகளை காவல்துறையினர் அப்போதே கைது செய்தனர். இதனைத் தொடர்ந்து இந்த வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்டது.

அந்த வழக்கு சம்பந்தமாக இதுவரை ஆறு பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டு உள்ளனர். நேற்று(ஜன.8) சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் வில்சன் வீரமரணம் அடைந்து ஓராண்டு ஆகிறது.

இதனைத் தொடர்ந்து களியக்காவிளை காவல்நிலையத்தில் அவரது படத்திற்கு காவல்துறை கண்காணிப்பாளர் பத்திரி நாராயணன், துணை காவல் கண்காணிப்பாளர் ராமசந்திரன் உள்பட காவல்துறை அலுவலர்கள் மற்றும் காவலர்கள் அஞ்சலி செலுத்தினர்.

இதையும் படிங்க:நண்பனைக் கொன்ற வழக்கில் நால்வருக்கு 10 ஆண்டுகள் சிறை!

ABOUT THE AUTHOR

...view details