தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 72ஆவது பிறந்தநாள் விழாவானது தமிழ்நாடு முழுவதும் வெகு விமரிசையாக நேற்று கொண்டாடப்பட்டது. அதிமுகவினர் சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
அதன் ஒரு பகுதியாக, கன்னியாகுமரியில் தென்தாமரைகுளம் பேரூர் பகுதியில் அதிமுக சார்பில் மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் மனுவேல் எலும்பு முறிவு மருத்துவமனை குழுவுடன் இணைந்து இலவச பொது மருத்துவ முகாம் நடைபெற்றது.