தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பிரசித்திப்பெற்ற கோயில்களில் அனுமதி கிடையாது - கரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை

கன்னியாகுமரி: கரோனா எதிரொலியாக கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்திப்பெற்ற கோயில்களில் சாமி தரிசனம்செய்ய பக்தர்களுக்கு அனுமதி கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரசித்தி பெற்ற கோயில்களில் அனுமதி கிடையாது
பிரசித்தி பெற்ற கோயில்களில் அனுமதி கிடையாது

By

Published : Mar 21, 2020, 10:50 AM IST

கரோனா எதிரொலியாகக் கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்திப் பெற்ற கோயில்களில் சாமி தரிசனம்செய்ய பக்தர்களுக்கு அனுமதி கிடையாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா வைரஸ் காரணமாக தமிழ்நாட்டில் பொதுமக்கள் அதிகமாகக் கூடும் இடங்களில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு மக்கள் நடமாட்டம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்திப் பெற்ற கோயில்களில் நேற்றுமுதல் பக்தர்கள் சாமி தரிசனம்செய்ய தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதன் முதல்கட்டமாகக் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலில் நேற்று முதல் மார்ச் 31ஆம் தேதி வரைக்கும் பக்தர்கள் சாமி தரிசனம்செய்ய அனுமதி ரத்துசெய்யப்பட்டுள்ளது.

பிரசித்திப் பெற்ற கோயில்களில் அனுமதி கிடையாது

இதேபோன்று சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயில், நாகர்கோவில் நாகராஜா கோயில், மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோயில் உள்பட மாவட்டத்தின் முக்கியக் கோயில்களில் இந்தத் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: அரசுப் பேருந்துகள், மெட்ரோ ரயில்கள் எதுவும் இயங்காது! - முதலமைச்சர் உத்தரவு

ABOUT THE AUTHOR

...view details